banner
எப்போதும் உங்களுக்கு சேவை செய்வதற்காகவே இருக்கிறோம்

25000 சேவை சாம்பியன்களுடன்
பரந்த அளவிலான சேவை மையங்கள்

மஹிந்திரா டிராக்டர் சேவை

வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, சேவையில் கவனம் செலுத்துவது, விவசாய தீர்வுகளுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பமான முதல் தேர்வாக விளங்குவதே மஹிந்திரா டிராக்டர் சேவையின் குறிக்கோளாகும். சேவையின் தரம், உற்சாகமூட்டும் உறவு, மதிப்புக்கூட்டப்பட்ட சேவை மற்றும் உத்தரவாதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கும் மஹிந்திராவின் சேவை அணுகுமுறையானது, சேவையின் முக்கிய கொள்கைகள் மற்றும் கடமைகளை எடுத்துக்கூறுகிறது.

*குறிப்பு - மஹிந்திரா உண்மையான உதிரி பாகங்களுக்கான எங்கள் ஆதரவு மைய எண் 1800 266 033 இலிருந்து 7045454517 ஆக மாற்றப்பட்டுள்ளது.

சேவையின் தரம்

மஹிந்திரா டிராக்டர் சேவையானது சேவையின் தரத்தில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாது அதனையும் தாண்டி சிறந்த மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்கி உயர்தரமான சேவையை வழங்குவதை வலியுறுத்துகிறது.

உற்சாகமூட்டும் உறவு

வாடிக்கையாளர்களுடன் கலந்து பேசுவதன் மூலமும், அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், அவர்களின் கவலைகளை தீர்ப்பதன் மூலமும், தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஆதரவை வழங்குவதன் மூலம் வலுவான உறவுகளை உருவாக்க முடியும்.

மதிப்புக்கூட்டப்பட்ட சேவை

முக்கியமான டிராக்டர் சேவையை வழங்குவது மட்டுமல்லாது நிறுவனம் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் கூடுதல் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

உத்தரவாதம் மற்றும் நம்பிக்கை

மஹிந்திரா டிராக்டர் சேவையானது, அதன் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவதன் மூலமும் உறுதியான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதன் மூலமும் வாடிக்கையாளர்களின் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க முயற்சிக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்

Smooth-Constant-Mesh-Transmission
90+ அம்சங்கள் மேம்படுத்தல் மானிய விலையில் நவஜீவன் கருவிகள்

மஹிந்திரா டிராக்டர் சேவையானது நவஜீவன் கருவிகள் மூலம் 90 க்கும் அதிகமான அம்சங்களின் மேம்படுத்தலுக்கான விருப்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, இந்த மேம்படுத்தல்கள் மானிய விலையில் கிடைக்கின்றன. இந்த கருவிகள் மஹிந்திரா டிராக்டர்களின் செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
30000+ சேவை முகாம்கள் 2022-23 நிதியாண்டு வரையில்

மஹிந்திரா டிராக்டர் சேவையானது 2022-2023 நிதியாண்டில் 30000 க்கும் மேற்பட்ட சேவை முகாம்களை நடத்தியது. இந்த சேவை முகாம்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் மஹிந்திரா டிராக்டர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை மையமான ஒரிடத்தில் பெறுவதற்கான வசதியை வழங்குகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
2 लाख+ 2022-23 நிதியாண்டில் லட்சக்கத்திற்கும் மேலான வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று சேவை செய்யப்பட்டது

மஹிந்திரா டிராக்டர் சேவையானது, 2022-2023 நிதியாண்டில் 200000 க்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு வீட்டுச் சேவை மூலம் அவர்களின் வீட்டிற்கே சென்று சேவை செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு டிராக்டர்களை ஒரு சேவை மையத்திற்கு எடுத்த செல்ல வேண்டிய அவசியமில்லை. தங்கள் மஹிந்திரா டிராக்டர்களுக்கு உடனடியாக உதவி மற்றும் ஆதரவைப் பெற வீட்டுச் சேவை அம்சம் அனுமதிக்கிறது.

Smooth-Constant-Mesh-Transmission
10 ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு மையங்கள்

மஹிந்திரா டிராக்டர் சேவையானது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 10 திறன் மேம்பாட்டு மையங்களை திறந்துள்ளது. இந்த மையங்கள் தனிநபர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன, இந்தப் பயிற்சிகள் டிராக்டர் சேவை மற்றும் பராமரிப்பில் தேவையான அறிவு மற்றும் நிபுணத்துவத்தை அவர்களுக்கு வழங்குகின்றன.

Smooth-Constant-Mesh-Transmission
5000+ டெக் மாஸ்டர் சைல்டு ஸ்காலர்ஷிப்

மஹிந்திரா டிராக்டர் சேவையானது, டெக் மாஸ்டர் சைல்டு ஸ்காலர்ஷிப்புகளை வழங்குகிறது, இது மஹிந்திரா டிராக்டர் சேவையில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்விக்கான ஸ்காலர்ஷிப்பாகும். தகுதியான மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால விருப்பங்களுக்கு ஆதரவு அளிப்பதே ஸ்காலர்ஷிப்புகளின் நோக்கமாகும்.

சேவை வழங்கல்கள்

வாடிக்கையாளருக்கே முதலிடம் +
பயிற்சியளிக்கப்பட்ட டெக்னீஷியன்கள்+
தயாரிப்பு நிறுவல்+
சேவை மையங்கள்+
SDC-திறன் மேம்பாட்டு மையம்+
சேவை முகாம்கள்+
வீட்டுச் சேவை+
நவஜீவன் கருவிகள்+
24 மணி நேரமும் இயங்கும் இலவச தொடர்பு மையம்+
தேவைக்கேற்பஇயக்கப்படும் சேவைகள் +
* மஹிந்திரா டிராக்டர்களுக்கு 6 வருட உத்தரவாத கொள்கை +
உண்மையான உதிரிபாகங்கள் +
உண்மையான லூப்ரிகண்டுகள் +