banner
உங்கள் டிராக்டரைக் கண்காணிக்கவும்

எங்கள் அடுத்த தலைமுறை செயற்கை
நுண்ணறிவு அடிப்படையிலான செயலி மூலம்
தொடர்பில் இருங்கள்

மேலோட்டப்பார்வை

டிஜிசென்ஸ் 4G என்பது அடுத்த தலைமுறை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வெளிப்படையான கட்டமைப்பு கொண்ட இணைக்கப்பட்ட தீர்வாகும். வெற்றிகரமான மஹிந்திரா டிஜிசென்ஸ் இயங்குதளத்தில் டிஜிசென்ஸ் 4G மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரவு சார்ந்த செயலி விவசாயிகள் தங்கள் டிராக்டர்களைக் கண்காணிக்கவும், விவசாய செயல்பாடுகளை தொலைதூரத்திலிருந்தபடியே கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் நோக்கம் விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய செயல்பாடுகள் குறித்த தரவுகளை வழங்குவதாகும், இதன் மூலம் அதிக இலாபகரமான முடிவுகளை விவசாயிகளால் எடுக்க முடியும். இந்த தீர்வை 4G மற்றும் ஸ்மார்ட்போன்கள் முதல் வழக்கமான மடிக்கணினிகள் வரை பல சாதனங்களில் பயன்படுத்த இணக்கமானது. இனி, விவசாயிகளின் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியாது. இப்போது அவர் தனது மூன்றாவது கண்ணை உள்ளங்கையில் வைத்துள்ளார்.

LOCATION SERVICES & SECURITY

இருப்பிட சேவைகள் மற்றும் பாதுகாப்பு

  • மேப் வியூ - கூகிள் வழங்கியுள்ள வரைபடங்களைப் பயன்படுத்தி, டிராக்டரை நேரலையில் / அதன் தற்போதைய இருப்பிடத்தைக் காணலாம் மற்றும் செயற்கைக்கோள் அல்லது சாலை வரைபடக் காட்சியைப் பயன்படுத்தலாம்.
  • லொகேட்டர் டிராக்டர் - இந்த அம்சத்தின் மூலம் வெறும் ஒரு டச் அல்லது கிளிக்கில் உங்கள் டிராக்டரை வரைபடத்தில் கண்டுபிடிக்கலாம். வரைபடத்தில் உங்கள் டிராக்டரை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும் இது உதவுகிறது.
  • லொகேட் மீ - இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் தற்போது இருக்கும் இடத்திற்கும் உங்கள் டிராக்டர் இருக்கும் இடத்திற்கும் இடையிலான தூரத்தை அறிந்துக்கொள்ளலாம்.
  • வெகிக்கிள் ஸ்டேட்டஸ் - வைஃபை ஐகானுடன் கூடிய அனிமேஷன் வடிவ டிராக்டர் வாகனத்தின் ஸ்டேட்டஸைக் குறிக்கிறது. டிராக்டர் இயங்கிக்கொண்டிருக்கும்போது – இந்த சின்னம் பச்சை நிறத்திற்கு மாறும் அத்துடன் டிராக்டரிலிருந்து புகை வருவது போன்ற அனிமேஷன் காட்டப்படும். டிராக்டர் இயங்காமல் இருக்கும்போது – இந்த சின்னம் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
    • வெகிக்கிள் ஸ்டேட்டஸ்: ""இயங்கிக்கொண்டிருக்கிறது""/""இயக்கப்படாமல் ஓரிடத்தில் நிற்கிறது"""" - பச்சை நிற வைஃபை சின்னம் மற்றும் பச்சை நிற எஞ்சின் ஹவர்ஸ் பொத்தான்
    • வெகிக்கிள் ஸ்டேட்டஸ்: ""நிறுத்தப்பட்டது"" - சிவப்பு நிற வைஃபை சின்னம் மற்றும் சிவப்பு நிற எஞ்சின் ஹவர்ஸ் பொத்தான்
  • ஜியோஃபென்ஸ் - வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப அவரவர் விரும்பும்படியான வடிவங்களில் ஜியோஃபென்ஸை உருவாக்கலாம். தாங்கள் நிர்ணயித்துள்ள எல்லைக்குள் வாகனம் நுழையும் போதெல்லாம் அல்லது அந்த எல்லையிலிருந்து வெளியேறும் போதெல்லாம் இது உங்களுக்கு எச்சரிக்கும்.
  • நெட்வொர்க் ஸ்டேட்டஸ் - இது டிராக்டர் ஆஃப்லைன் மற்றும் பயனர் ஆஃப்லைன் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
    • டிராக்டர் நெட்வொர்க் பகுதிக்கு வெளியே இருக்கும்போது டிராக்டர் ஆஃப்லைன் என்ற அறிவிப்பைக் காட்டுகிறது
    • வாடிக்கையாளர் மொபைலுக்கு தரவு நிறுத்தப்படும்போது பயனர் ஆஃப்லைன் என்ற அறிவிப்பைக் காட்டுகிறது
FARMING OPERATIONS & PRODUCTIVITY

விவசாய செயற்பாடுகள் மற்றும் உற்பத்தித்திறன்

  • வானிலை - உங்கள் டிராக்டர் இருக்கின்ற இருப்பிடத்தின் அடிப்படையில் 3 நாட்கள் வரைக்குமான வானிலை குறித்த தகவல்கள் காண்பிக்கப்படும்.
  • டீசல் பயன்பாடு - இந்த அம்சம் டீசல் டேங்கில் எவ்வளவு டீசல் உள்ளது, அருகிலுள்ள எரிபொருள்-நிரப்பு நிலையம் அமைந்துள்ள தூரம் ஆகியவற்றைக் காட்டுகிறது, மேலும் இது வாடிக்கையாளரின் தற்போது இருக்கும் இடத்திற்கும் டிராக்டர் இருக்கின்ற இடத்திற்கும் இடையிலான தூரத்தையும் காட்டுகிறது.
  • டிராக்டர் பயன்பாடு - இங்கே காட்டப்பட்டுள்ள தரவு இரண்டு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது – வயலுக்குள் செய்யப்படும் பணி மற்றும் சாலைப்பணி. வயலுக்குள் செய்யப்படும் பணி ஏரியா கால்குலேட்டரைப் பயன்படுத்தி அளவிடப்படுகிறது, அதே நேரத்தில் டிரிப் கால்குலேட்டரைப் பயன்படுத்தி லோடு / சாலைப் பணி கணக்கிடப்படுகிறது. ஏரியா கவரேஜ் மற்றும் டிரிப் கால்குலேட்டர் இரண்டிற்கும் - அதிகபட்சம் 3 மாத தரவு கிடைக்கும். இதை குறித்து சற்று ஆழமாகத் தெரிந்து கொள்வோம்:
    • ஏரியா கால்குலேட்டர்: ஏக்கரில் அளவைத் தேர்ந்தெடுத்து வயலுக்குள் செய்யப்படும் பணி குறித்த அறிக்கைகளை அவரவர் விரும்பும் வடிவங்களில் பயனர் காணலாம். பயனர்கள் வயலுக்குள்ளேயே குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் அதற்குரிய வேண்டும் தகவல்களைப் பெறலாம் . பணி எவ்வளவு நேரம் செய்யப்பட்டது மற்றும் சராசரி RPM ஆகியவையும் இங்கே காண்பிக்கப்படும்.
    • டிரிப் கால்குலேட்டர்: சாலை பணி கிலோமீட்டரில் கணக்கிடப்படுகிறது. நாள் அல்லது மாதங்களில் கால அளவுகளைத் தேர்ந்தெடுத்து, சாலை பணி குறித்த அறிக்கைகளை அவரவர் விரும்பும் வடிவங்களில் காணலாம். குறிப்பிட்ட டிரிப்புக்கான தகவல்கள் பற்றி தனித்தனியாகத் தெரிந்துக்கொள்ளலாம்
VEHICLE HEALTH & MAINTENANCE

வாகன ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு

  • எச்சரிக்கை அறிவிப்பு - அறிவிப்புகள் வந்துள்ளது குறித்து பெல் ஐகானில் சுட்டிக்காட்டப்படும். வழக்கமான விழிப்பூட்டல்கள் புஷ் அறிவிப்புகளாகவும், முக்கியமான விழிப்பூட்டல்கள் எஸ்எம்எஸ் ஆகவும் மொபைல் செயலிக்கு அனுப்பப்டும். முக்கியமான விழிப்பூட்டல்களில் அதிக எஞ்சின் வெப்பநிலை மற்றும் குறைந்த ஆயில் பிரஷர் ஆகியவை அடங்கும். அதிக எஞ்சின் RPM எச்சரிக்கை, குறைவான எரிபொருள் அளவு, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகனத்தின் கீயை வாகனத்திலிருந்து எடுத்தல், வரவிருக்கின்ற சர்வீஸ் குறித்த நினைவூட்டல் அறிவிப்பு மற்றும் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை ஆகியவை பிற வழக்கமான விழிப்பூட்டல்களில் அடங்கும்..
  • எஞ்சின் ஓடிய நேரம் - தற்போது எஞ்சின் ஓடிய நேரம், ஒட்டுமொத்தமாக எஞ்சின் ஓடிய நேரம் மற்றும் அடுத்த சர்வீஸுக்கு இன்னும் எத்தனை மணி நேரம் உள்ளது என்பதைக் காணலாம். கடந்த காலங்களில் டிராக்டர் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்த தரவு உதவியாக இருக்கும்.
PERSONALIZATION & CONFIGURATION

தனிப்பயனாக்கம் மற்றும் உள்ளமைவு

  • "வாகனத்தைத் தேர்ந்தெடுத்தல் - பயனர்கள் தாங்கள் வைத்துள்ள பல்வேறு டிராக்டர்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனத்தின் பெயர் திரையில் காண்பிக்கப்படும். இந்த அம்சமானது விவசாயி வயலில் உபயோகிக்க எத்தனை டிராக்டர்கள் உள்ளன மற்றும் அவற்றின் பயன்பாடு நிலவரம் குறித்து தெரிந்துக்கொள்ள உதவுகிறது.
  • ஹாம்பர்கர் மெனு - இந்தப் பிரிவு விவசாயிகள் அவரவர்களின் விருப்பப்படி பல தனிப்பயனாக்கல் செயல்பாடுகளைச் செய்ய அனுமதிக்கிறது, இவற்றில் பின்வருவன அடங்கும் -
    • மை டிராக்டர் – இந்த அம்சமானது, உங்கள் டிராக்டருக்கு நீங்கள் விரும்பும் பெயரை வைக்க அனுமதிக்கிறது, அது மட்டுமல்லாது
    • பெயர் மற்றும் தொடர்பு எண் ஒதுக்குதல்
    • எச்சரிக்கைகள் அமைத்தல்
    • என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்ற நினைவூட்டலை அமைத்தல்
    • விருப்ப மொழியை அமைத்தல்
    • பின் ( PIN) எண்ணை மாற்றுதல் போன்றனவாகும்
  • ஆஸ்க் மீ - இந்த அம்சத்தில் முன்பே தொகுக்கப்பட்ட சில குறிப்பிட்ட கேள்விகளும் அதற்கான பதில்களுடனும் வருகிறது. டிராக்டர் இருப்பிடம், டீசல் அளவு, முக்கியமான எச்சரிக்கைகளின் நிலவரம், டிராக்டர் பயன்பாடு, திரையைப் பயன்படுத்த வசதியாக இல்லாத பயனர்களுக்கான சேவை நிலவரம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.. நல்ல நெட்வொர்க் கவரேஜ் இருந்தால் மட்டுமே இந்த அம்சம் உபயோகப்படும்