மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர் ஏன் வாங்க வேண்டும்: மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
இந்திய டிராக்டர் சந்தை மற்றவற்றிலிருந்து தனித்துவமானது - விவசாயிகள் அனைத்து விவசாயப் பணிகளையும் செய்யக்கூடிய ஒரு ஆல்-ரவுண்டர் டிராக்டரைத் தேடுகிறார்கள் அதே சமயத்தில் அந்த டிராக்டர் விலை குறைவாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். அத்தகைய இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் டிராக்டர்களில் ஒன்றுதான் மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர். இது உறுதியான வெளிப்புறம், சக்திவாய்ந்த எஞ்சின், குறைவான எரிபொருள் நுகர்வு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் சிறந்து விளங்குகிறது. இந்த மஹிந்திரா டிராக்டர் பற்றி இங்கே மேலும் காணலாம்.
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர்: மேலோட்டப் பார்வை
மஹிந்திரா 275 DI XP பிளஸ் டிராக்டர் இதன் பிரிவிலேயே ஈடு இணையில்லா செயல்திறன் மற்றும் மிகக் குறைவான எரிபொருள் நுகர்வு என இந்த இரண்டு அம்சங்களிலும் சிறந்ததாக விளங்குகிறது . இது ELS டீசல் எஞ்சின் மூலம் இயங்குகிறது, இது அனைத்து வகையான கருவிகள் மற்றும் விவசாயப் பணிகளை வியர்வை சிந்தாமல் செய்ய போதுமான சக்தியை உருவாக்குகிறது.
கூடுதலாக, இது மிகவும் சவாலான வானிலை நிலைமைகளைத் தாங்கக்கூடிய உறுதியான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் இமயமலையில் அல்லது மராட்டிய நெல் வயல் என எந்தமாதிரியான நிலப்பரப்பில் மஹிந்திரா டிராக்டரை ஓட்டினால்- காலநிலை அல்லது மண் நிலைமைகள் காரணமாக டிராக்டர் சேதமடைந்துவிடுமோ என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இதில் உயர் தொழில்நுட்ப ஹைட்ராலிக்ஸ் இடம்பெற்றுள்ளது, இது டிராக்டருக்கு அதிக சுமையைக் கொடுக்காமல் அல்லது டிராக்டரின் முன்பக்கத்தில் சிமெண்ட் பைகளை ஏற்ற வேண்டிய அவசியமின்றி கனமான கருவிகள் மற்றும் சுமைகளைத் தூக்குகிறது.
இந்த டிராக்டர் தொழில்துறையிலேயே முதன்முறையாக 6 ஆண்டு உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்குகிறோம். அதிக செலவாகக்கூடிய பழுது அல்லது பிரேக்-டவுன் ஏற்படக்கூடுமோ என்பது பற்றி கவலைப்படாமல் முழு திறனையும் கொண்டு டிராக்டரை இயக்கலாம்
மஹிந்திரா 275 DI XP பிளஸ்: மைலேஜ்
மஹிந்திரா 275 DI XP பிளஸ் எரிபொருளை மிச்சப்படுத்துகிறது, ஆனால் எவ்வாறு எரிபொருளை மிச்சப்படுத்துகிறது? இதற்கு அதன் எஞ்சின் வடிவமைப்பு, டியூன் மற்றும் டிரான்ஸ்மிஷன் தான் காரணம்.
டீசல் எஞ்சின் நீளமான ஸ்ட்ரோக் கொண்டது, எனவே வழக்கமான-ஸ்ட்ரோக் எஞ்சின்களை விட பிஸ்டன் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கின் போதும் அதிக தூரம் பயணிக்கிறது, இது குறைந்த RPM-களில் அதிக டார்க்கை உருவாக்குகிறது. அடுத்து, எரிப்புக்கான காற்று-எரிபொருள் கலவையை உகந்ததாக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது, எரிப்பு செயல்முறையைத் தூண்டுவதற்கு மிகக் குறைந்த அளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறது.
பின்னர் எஞ்சின் ஒரு பகுதியளவு கான்ஸ்டன்ட் மெஷ் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது எஞ்சினிலிருந்து சக்கரங்களுக்கு செல்லும்போது சக்தி இழப்பைக் குறைக்கிறது. இதனால் எஞ்சின் உற்பத்தியாகும் சக்தி ஓரளவுக்கு இழப்பு ஏற்படாமல் சக்கரங்களை சென்றடைகிறது, இதனால் எஞ்சின் இன்னும் மெதுவான வேகத்தில் இயங்குகிறது.